தேர்வு நெருங்குகிறது
ஓன்றும் படிக்கவில்லை
புத்தகங்கள்கூட இல்லை
எப்பொழுது ஆரம்பித்து
எப்பொழுது முடிக்கமுடியும்
தெரியாமல் அல்லாடிக்கொண்டிரிந்தேன்
கனவு கலைந்து நிஜம் மீட்டது
அதற்கு இது தேவலாம்தான்
இதுவும்
கைமீறும்போது இதுவும்
கலைந்து வேறிடத்தில் விழிப்போமா?
வெயிலுக்குப் பழகிவிட்டபோது
மழைவந்து
மனசைக்கலைக்கிறது
திக்கு திசை
தெரியாமல்
நின்றிருக்கும்
போது
போக விரும்பாத
ஊருக்கு வழி
சொல்கிறார்கள்
இரவிடம் தூக்கத்திற்கு
கெஞ்சியபோது
இனியகனவுகளையும்
வேண்டமறந்து
போயிற்று
என் சந்தோஷங்கள்
அனைத்தையும்
குழைத்தொரு
அஸ்தமனத்தை
வரைந்தேன்
என்துக்கங்கள்
யாவையும்
கொணடு
வானத்தில்
கார்முகில்
நிரப்பினேன்.
இப்படி செய்திருக்கலாம்
அப்படி செய்திருக்கலாம்
என்று போகாத
வூருக்கெல்லாம்
போய்வந்த மனசு
இப்படியே இருந்து
விட்டால்கூட போதும்
என்றதும் அமைதியானது.
அவரிறந்ததும் என்
முகம் தீட்டாகிவிட்டது
வெளியே கிளம்பிக்
கொணடிருப்பவர்கள்
என்னைப்பார்த்து
திடுக்கிடுகிறார்கள்
முணுமுணுக்கிறார்கள்
இவளுக்கு விவஸ்தையேயில்லை
யென்று
இப்பொழுதெதற்குத்
தலைகாட்டுகிறாளென்று
துணிக்கடைபொம்மை
போல் நான் முகமற்று
போனால் என்ன?
இருளும் இரவும்
தோற்றவரைத்தேற்றும்
தன்முகமே பாராமுகமாகும்போது நெருங்கியவரே
தூரமாகும்போது
நினைவுவலியையே
சுற்றிச்சுற்றிவரும்
போது
மெல்லிய
காற்று உடல்வருடிப்போகும்
வளர் நிலா தலைதாங்கித்திரும்பும்
எரிநட்சத்திரம்
துயர்வாங்கிச்செல்லும்
இளையராசாவின் சிம்ஃபனிஇசை
மனதை
வான்வெளிகளில் பறக்கவிட்டு
அமைதிக்குவழிகாட்டும்
வெற்றிக்கானப்பாதையைத்
தேடச்சொல்லும்
விடியலுக்குக்காத்திருக்கச்செய் யும்.
சிவன் கண் கேட்பான்
சரஸ்வதி செவி
கேட்பாளா?
கட்டைவிரல் கேட்டவர்கள்
கேள்விகேட்க
கூடாதென்கிறார்கள்
பூசிக்கச்சொல்கிறார்கள்
பசுவைபுனிதமென்கிறார்கள்
சகமனிதனைவெறுக்கிறார்கள்
மதம்பார்த்துகருவறுக்கிறார்கள்
மக்கள்வெகுண்டெழும்போது
புதுஎதரிகள்உருவாக்கிதிசைத்திரு ப்புகிறார்கள்
பொற்காலம் என்றுகூறி கற்காலத்திற்கு இட்டுச்செல்லபார்க்கிறார்கள்
மீண்டும் அடிமையாவோமா
அல்லதுஅடிபணியமறுப்போமா?
தேடியதை அடைந்தோம்
தேடியதுதான் அடைந்தோமா?
தொலைத்தது
மீண்டது
கிடைத்தது தொலைத்ததா?
கடந்தது திரும்பாது
திரும்பியது கடந்ததா?
காலம் கடந்துவிட்டது
இனி
தலைதூக்கமுடியாது
என்றனர்
அப்பொழுதேச்
செய்திருக்கவேண்டும்
காலம் எல்லாவற்றையும்
கழித்துக்கொண்டே
தான்இருக்கிறது
மேடைவிட்டு
இறங்கும்போது
அப்பொழுதேச்
செய்ததெல்லாம்
இப்பொழுதொன்றுமில்லை
என்றாகிவிடும்
காலம் இருப்பதை இல்லாமல்
ஆக்கும்போது இருந்தால் போதும்
என்றாகிவிடும்
இறுதியில் எல்லோருக்குமே
காலம் தீர்ந்துவிடும்
காலம் மட்டும் மனிதர்
கடந்து நிற்கும்
மனிதர் இல்லையென்றால் காலம் எதற்கு?