தூங்கியெழுந்த பின்
நினைவுக்கு வரும்
சில கனவுகள் சிலநேரம் நாள்முழுதும்
குதூகலம் அடையச்செய்கின்றன.
நெடுநாள் பார்க்காத
நம்மை பார்க்கவிரும்பாத
சில நண்பர்களை
பார்க்கிறோம்.
நாம் வாங்கவே
முடியாத வீட்டை
வாங்குகிறோம்.
நாம் விட்டு விலகிய
அல்லது நம்மை விலக்கிய
சாமியைப்பார்க்கிறோம்.
அது ஏதும் வரம் தருவதில்லை
ஆனால் பிறர் வழிபாட்டுத்தலங்களை
இடித்து தனக்கோர் ஆலயம் கேட்பதில்லை.
நல்லவேளை எந்த கனவிலும்
நுழைய முடியாத ஒரு கோவிலுக்கும்
எந்த சாமியும் அழைப்பதில்லை.
அங்கு போய் தீக்குளித்து
தரிசனம் தேடவேண்டியதில்லை.
No comments:
Post a Comment