மருத்துவர்களினால்
உணவுகள் விலக்கப்படும்
போதுதான்
அதையெல்லாம்
இன்னும் சுவைத்திருக்கலாமோ
என்று தோன்றுகிறது.
பசிமறந்து உழைத்த
நாட்கள் நினைவுக்கு
வருகின்றன.
இப்பொழுது அதுபோல்
இருக்கமுடியாது.
உடல் சாமியாடிவிடும்.
இப்பொழது கையேந்துபவர்களின்
நிலையறிந்து
கை தானே கொடுக்கிறது.
உழைத்துச்சாப்பிடு
என்று வலியுறுத்துவதில்லை.
No comments:
Post a Comment