Thursday, August 13, 2026

கிடைக்கவில்லை

தேடியவர்கள்

வெறுங்கையோடு

திரும்பிக்கொண்டிருக்கும்போது

புதிதாகத்தேடக்கிளம்புகிறோம்

ஒன்றுமே கிடைக்கவில்லை

என்று திரும்பியவர்கள்

சொல்லியும் நாங்கள்

கேட்கவில்லை.

போனவர்களா

திரும்பிவந்தார்கள்?

நாங்கள் போவதே

எங்களை தொலைப்பதற்காகத்தானே.


No comments: