Wednesday, August 26, 2026

அம்மா

காலையில் எழுந்ததும்

மனதும் விழித்துக்கொள்கிறது

முகம் கழுவும்போது

தண்ணீரில்லாமல்

தத்தளித்த கோடையை

தேவையில்லாமல்

நினைக்கிறது 

இந்நேரத்துக் குளிர்ச்சியை

கசக்கவைக்கிறது

அம்மாவும் இப்படித்தான்

சந்தோஷமாக இருக்கும்போது

கஷ்டத்தை நினைவூட்டுவார்கள்

இறந்த முதல் குழந்தைக்காக

துக்கத்தின் உடை தரித்தார்கள்

இடரையே எதிர்பார்த்தார்கள்

கசப்பையே குடித்தார்கள்

இனிப்பின் சுவை மறந்தார்கள்

எதிர்மறை எண்ணங்கள்

வரும்பொழுது

அம்மாவின் இருண்ட

பாதை தொட்டு

பதறித்திரும்புவேன்.





No comments: