Wednesday, August 26, 2026

கனவுக்கல்லூரி

கனவு பலன்

கற்றுக்கொடுப்பதற்கு

புதிதாக ஒரு கல்லூரி

திறக்கப்படுகிறது.

அதில் பல்லி ஜோசியம்,

பில்லிசூன்யம்,

சகுனம் பார்த்தல்

விருப்பப்பாடங்கள்.

படிப்பு முடித்தவுடன் 

அரசுப்பணி உறுதி.

இல்லம் தேடி

மருத்துவத்தின்கீழ்

இவர்கள் மக்கள்பிணித்தீர்ப்பர் 

என்று நம்பத்தகுந்த

வட்டாரங்கள்

தெரிவிக்கின்றன.




No comments: