Tuesday, August 25, 2026

வர்ணம்

மூவர்ணம் மறைத்தது

நாலாவது வர்ணம்

யாரின் வண்ணம் நீலம்?

துயரின் நிறமா

அது துடைத்தவரின்

நிறமா?

காலச்சக்கரம்

சுழன்றும்

மூவர்ணமே

மேலிருப்பாரா?

மண்ணின் மைந்தர்கள்

நாடற்றுப்போவாரோ?

மொழியற்றுப்போவாரோ?

மொழியற்றுப்போனால்

வழியற்றுப்போவாரே.

வார்த்தைகளில் வரலாறு

இருக்கிறது

ஆடுதாண்டும் ஆறு

யாருக்குச்சொந்தம்?

நாகர்கள் வாழ்ந்த

நாட்டில் நாக்பூரின் ஆட்சியா?



No comments: